கக்கன் பிறந்தநாள் விழா

நெல்லையில் கக்கன் பிறந்தநாள் விழா நடந்தது.
கக்கன் பிறந்தநாள் விழா
Published on

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் 116-வது பிறந்த விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கக்கன் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், வக்கீல் பிரிவு இணைத்தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பரணி இசக்கி, மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மூலைக்கரைப்பட்டியில் கக்கன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் லெனின் பாரதி, இளைஞர் காங்கிரஸ் நிக்சன், வார்டு கவுன்சிலர் ஆதம், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் துரை அரசு, நிர்வாகி வேல் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கக்கன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com