கலைஞரின் 103-வது பிறந்த நாள்: செல்வபெருந்தகை புகழாரம்

‘மாநில சுயாட்சிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் முத்தமிழறிஞர்’ என்று செல்வபெருந்தகை கூறினார்.
செல்வபெருந்தகை
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

புகழஞ்சலி

தமிழர் பெருமை, சமூக நீதி, மொழி உரிமை, தொலைநோக்கு பார்வை மற்றும் மாநில சுயாட்சிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த தினமான இன்று அவருக்கு எங்களது புகழஞ்சலி.

அவரது எழுத்துப் பணியும், சிந்தனைகளும், மக்கள் நலப் பணிகளும் என்றும் நமது தலைமுறைகளை வழிநடத்தும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com