கலைஞரின் 103-வது பிறந்த நாள்: உதயநிதி வாழ்த்து செய்தி

‘மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்’ என்று உதயநிதி கூறினார்.
உதயநிதி
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்த்து

தந்தை பெரியாரின் வழியில் சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com