

களக்காடு,
நெல்லை மாவட்டம், களக்காடு கோவில்பத்து பகுதியில் நேற்றிரவில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் 2 பேர் சுற்றி வந்துள்ளனர். அவர்கள் வீடுகளின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் நாய்கள் சத்தம் போட்டு விரட்டியதால் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த காட்சிகள் அப்பகுதி வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்பத்தில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மேலும் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில் கொள்ள கும்பல் நடமாடிய படங்கள் வெளிவந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.