காளீஸ்வரி நிறுவனத்தின் 'தீபம் அகர்பத்தி' அறிமுகம்

ரோஜா, சந்தனம், லாவெண்டர், ப்ளாஸம், சாம்பிராணி மற்றும் மல்லி என ஆறு நறுமணங்களில் 'தீபம் அகர்பத்தி' கிடைக்கிறது.
Published on

இந்தியாவில் பிரபலமான 'கோல்ட் வின்னர்' சமையல் எண்ணெயை உருவாக்கிய நிறுவனமான காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட், பல ஆண்டுகளாக 'தீபம்' விளக்கேற்றும் எண்ணெய் மூலம் வீடுகளுக்கு ஒளியூட்டி தெய்வீக மணம் பரப்பி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 'தீபம் அகர்பத்தி'யை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் ஏப்ரல் 4 அன்று இதன் அறிமுக விழா நடைபெற்றது.

புகை குறைவான நறுமண அகர்பத்திகள்

ரோஜா, சந்தனம், லாவெண்டர், ப்ளாஸம், சாம்பிராணி மற்றும் மல்லி என ஆறு இனிமையான நறுமணங்களில் 'தீபம் அகர்பத்தி' கிடைக்கிறது. இதன் தனித்துவமான அம்சம், கரி பயன்படுத்தாமல் பல அழகிய வண்ணங்களில் தயாரிக்கப்பட்டிருப்பதும், புகை மிகவும் குறைவாக இருப்பதும் மற்றும் இதன் நறுமணங்கள் நீடித்து நிலைப்பதும் தான். எனவே இது பூஜை, தியானம் மற்றும் அமைதியான ஓய்வு நேரங்களுக்கு ஏற்றதாகவும், இனிய அனுபவத்தைத் தருவதாகவும் இருக்கும் என காளீஸ்வரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெய்வீக அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கம்

அறிமுக விழாவில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரேம் குமார் பேசுகையில், ''உங்கள் தெய்வீக அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே தீபம் அகர்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதைப்போலவே தொடர்ந்து இன்னும் பல புதிய தயாரிப்புகளை விரிவாக்கவும் திட்டமிட்டு வருகிறோம்." என்று தெரிவித்தார்.

மார்க்கெட்டிங் துணைத் தலைவர் டைரன் டால் கூறுகையில், "காளீஸ்வரி எப்போதும் தரத்தையும் புதுமையையும் முன்னிறுத்தி செயல்படுகிறது. எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்கள், நுகர்வோரின் தேவைகளைப் புரிந்து, பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் தயாரிப்புகளை உருவாக்க உதவுகின்றன. தீபம் அகர்பத்தி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்றார்.

இந்த அறிமுகத்துடன், காளீஸ்வரி ரிபைனரி நிறுவனம் தனது நுகர்வோர் பிரிவுகளை விரிவுபடுத்தி, இந்திய வீடுகளில் நம்பிக்கை, புதுமை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட பொருட்களை வழங்குவதற்கான தனது முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com