கள்ளச்சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து கண்டன போராட்டம் - பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

கள்ளச்சாராய மரணங்களை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கள்ளச்சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து கண்டன போராட்டம் - பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
Published on

சென்னை,

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்துக்கு 22 பேர் வரை பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் போலீசார் முடுக்கி விடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் இது தொடர்பாக வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராய மரணங்களை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜக வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com