கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்து சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.

இதன் காரணமாக பள்ளி வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள பொருட்களும் சேதப்படுத்தப்பட்டு சூறையாடப்பட்டன. கள்ளக்குறிச்சி போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கலவரக்காரர்களையும் கைது செய்வதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போலி தகவல்களை பரப்பியதாக தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் மீது கல் வீசியது, பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com