கள்ளக்குறிச்சி: அதிமுக நகர செயலாளர் திடீர் ராஜினாமா.!

தொடர்ந்து நகர செயலாளராக பணியாற்ற எனக்கு மனமில்லை என்று பாபு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி: அதிமுக நகர செயலாளர் திடீர் ராஜினாமா.!
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜீவ்காந்தி அறிமுகம் மற்றும் செயல் வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ அழகுவேல் பாபு அவர்களின் கணவரும், கள்ளக்குறிச்சி நகர செயலாளருமான பாபு, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா குறித்து மேடையில் அவர் பேசுகையில், ”பல மன உலைச்சல் இருந்தாலும், கழகம் வெற்றி பெற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தொடர்ந்து நகர செயலாளராக பணியாற்ற எனக்கு மனமில்லை. என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி, ராஜீவ் காந்தியை அனைவரும் சேர்ந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். நன்றி.”

இவ்வாறு அவர் கூறி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக நகர செயலாளர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது, கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com