கள்ளக்குறிச்சி: 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி: 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
Published on

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை (ஸ்டிக்கர்) ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com