கள்ளக்குறிச்சி: டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் - 4 பேர் பலி

திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி: டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் - 4 பேர் பலி
Published on

கள்ளக்குறிச்சி,

திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மணலூர்பேட்டை அருகே சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், காரில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த ஆயுதப்படை உள்பட 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், படுகாயமடைந்த இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com