

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியரின் அலட்சியத்தால் மாணவர்கள் செய்த செயல் அருகிலிருந்த பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் வழக்கம் போல் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கு சென்றனர். ஆனால் ஆசிரியர் வருவதற்கு தாமதமானதால் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டியிருந்தது.
இதனால் காத்திருந்த மாணவர்கள் சிறிது நேரத்தில் நுழைவாயிலில் இருந்த இரும்பு கேட் மீது ஆபத்தான முறையில் ஏறி குதித்து பள்ளி வளாகத்திற்குள் சென்றனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தாமதமாக பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர் மீது பள்ளி கல்வித் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.