கள்ளக்குறிச்சி: மழையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் பகுதியில் கேசம்மாள்(98) என்ற மூதாட்டி வசித்து வந்த வீட்டில் உள்ள மண் சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கேசம்மாள் சுவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மூதாட்டியின் வீட்டின் அருகே வசிக்கும் நபர்கள் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






