கள்ளக்குறிச்சி சம்பவம்: கருணாபுரத்தில் குஷ்பு நேரில் விசாரணை

கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று குஷ்பு கூறினார்.
கள்ளக்குறிச்சி சம்பவம்: கருணாபுரத்தில் குஷ்பு நேரில் விசாரணை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் 3 பேர் கொண்ட விசாரணை குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. மேலும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் குஷ்பு கூறியதாவது:-

விஷ சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும். பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்தது?. விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com