கள்ளக்குறிச்சி விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் சூழல், பள்ளியின் நிலை, போலீசார் பாதுகாப்பு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆலோசனை பங்கேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com