

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் ராவுத்தர் மற்றும் அன்பரசன் ஆகியோர், தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் சித்தலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பானையங்கால் அருகே சென்றபோது, சாலையில் சென்ற மினிவேன் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் ராவுத்தர் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.