கள்ளக்குறிச்சி: தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும், சிறுவங்கூரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே டீக்கடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாய்த்தகராறு

கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணிசாமி (வயது 28). இவருக்கும் சிறுவங்கூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(33) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி டீக்கடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அந்தோணிசாமியைத் தாக்கியுள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், நேற்று அதிகாலை தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தோணிசாமியின் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளார். இதில் வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com