

சென்னை,
கள்ளக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி, 5 ரெயில்கள் மேல்நாரியப்பனூரில் 3 நாட்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கள்ளக்குறிச்சியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஜூன் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் மேல்நாரியப்பனூரில் நின்று செல்லும்.
அதன்படி, சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22154) இரவு 10.41 மணிக்கும், சென்னை எழும்பூர் - சேலம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22153) அதிகாலை 4.19 மணிக்கும், யஸ்வந்த்பூர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16573) நள்ளிரவு 2.24 மணிக்கும், புதுச்சேரி - யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் (16574) நள்ளிரவு 1.34 மணிக்கும், மங்களூரு சென்டிரல் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16856) காலை 5.19 மணிக்கும் மேல்நாரியப்பனூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.