கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
Published on

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் நேற்று இரவு கோவில் திருவிழாவிற்கு ஊர்வலமாக வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது ஊர்வலத்தில் சென்ற மர்ம நபர் கல்வீசி தாக்கியதில் பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து கொட்டியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து கீழே இறங்கிவிட்டனர். இதையடுத்து பஸ் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. இந்த தகவல் அறிந்து பேராவூரணியில் இருந்து கீரமங்கலம் வழியாக கொத்தமங்கலம் சென்ற அரசு டவுன் பஸ்சும் நகரத்திலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com