தங்க மயில் வாகனத்தில் கல்யாண சுப்பிரமணியர் வீதியுலா

வைகாசி விசாகத்தையொட்டி தங்க மயில் வாகனத்தில் கல்யாண சுப்பிரமணியர் வீதியுலா வந்தார்.
தங்க மயில் வாகனத்தில் கல்யாண சுப்பிரமணியர் வீதியுலா
Published on

அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ தெய்வங்களான வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், அம்பாள், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருமுறைகள் உள்ளிட்ட பதிகங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள், ஆராதனைகளுடன் சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாலையில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சி தந்தார். பல்வேறு பூஜைகளுக்கு பிறகு ராஜ வீதிகளில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் வீதியுலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com