திருச்சி உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் கமல்ஹாசன்

திருச்சியில் போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததில் பலியான உஷா குடும்பத்துக்கு கமல்ஹாசன் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். #KamalHaasan
திருச்சி உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் கமல்ஹாசன்
Published on

திருச்சி,

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்ட போது,

போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததில் பலியான உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்தார். திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர் எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதற்காக திருச்சி சென்ற கமல்ஹாசன், உஷா குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தான் அறிவித்தபடியே 10 லட்ச ரூபாயை வழங்கினார். உஷாவின் அம்மா லூர்துமேரி மற்றும் சகோதரர் ராபர்ட்டுக்கு 5 லட்ச ரூபாய், உஷாவின் கணவர் ராஜாவுக்கு 5 லட்ச ரூபாய் என 10 லட்ச ரூபாயைப் பிரித்து வழங்கி உள்ளார் கமல்ஹாசன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com