கமல்ஹாசன் தலைமையில் இன்று அவசர செயற்குழு கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தலைமையில் இன்று அவசர செயற்குழு கூட்டம்
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு உள்ளன. தேர்தல் பணிக்குழு, தொகுதி பொறுப்பாளர்கள் என பல்வேறு நிலைகளை உருவாக்கி பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணியுடன், தேர்தல் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து களம் காண்பதா என்பது குறித்து முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்க இருப்பதாக தகவல்கள் வௌயாகி உள்ளன. மேலும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களும், தேர்தல் பணிக்கான குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com