மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுடன் கமல்ஹாசன் நேர்காணல்; காணொலி காட்சி மூலம் நடத்தினார்

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணும் பணி நாளை நடக்க உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் பேசி வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுடன் கமல்ஹாசன் நேர்காணல்; காணொலி காட்சி மூலம் நடத்தினார்
Published on

வேட்பாளர்களின் தேர்தல் அனுபவங்கள், மக்களிடம் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு, அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் ஆகியவற்றை கேட்டு வருகிறார். ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் கருத்துகளை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதுவரை, விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களை சேர்ந்த 65 வேட்பாளர்களிடம் கமல்ஹாசன் கருத்து கேட்டு உள்ளார். தொடர்ந்து வேட்பாளர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com