முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சென்னை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story






