ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்


ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்
x
தினத்தந்தி 16 July 2025 12:11 PM IST (Updated: 16 July 2025 12:28 PM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வாகினர். இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் வெளியிட்டு இருந்தார்.

இதுதொடர்பான அறிக்கையில், "மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம் நேரில் காட்டி, மகிழ்ச்சியை மநீம தலைவர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.




1 More update

Next Story