

சென்னை,
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், கமல்ஹாசன் நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்றும் டிசம்பர் 4-ந்தேதி முதல் தனது வழக்கமான பணிகளை தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.