“முகவரி இல்லாத கடிதம்” விஜய் பேச்சு குறித்து கமல்ஹாசன் பதில்


“முகவரி இல்லாத கடிதம்” விஜய் பேச்சு குறித்து கமல்ஹாசன் பதில்
x

அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா? தப்புங்க என எம்.பி.கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், 'வரும் சட்டசபை தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கும். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன் எனத் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மநீம தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் கூறியதாவது:

என்ன கருத்து சொல்வது. எனதுபெயரை சொல்லியுள்ளாரா? யார் பெயரையாவது சொல்லியுள்ளாரா? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா? தப்புங்க அவர் எனது தம்பி, என்றார்.

1 More update

Next Story