கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
கரூர்
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான நடிகர் கமல்ஹாசன் இன்று கரூர் சென்றுள்ளார். அவர் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
Related Tags :
Next Story






