கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள்: செல்வப்பெருந்தகை வாழ்த்து


கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள்: செல்வப்பெருந்தகை வாழ்த்து
x

கமல்ஹாசன் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;-

“தமிழர் சிந்தனைக்கு புதிய பரிமாணம் கொடுத்த கலைப்பேராளியான நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அரசியல் துறையிலும், கலைத்துறையிலும், , ஒவ்வொரு தலைமுறைக்கும் திசை காட்டும் உங்கள் பயணம் தொடர்ந்து மேலும் உயரங்களை எட்டட்டும்! தமிழ் மண் உங்கள் கனவுகளை வெற்றி செய்யட்டும்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story