கமல்ஹாசன் கருத்து சரியானது -சபாநாயகர் அப்பாவு பேட்டி


கமல்ஹாசன் கருத்து சரியானது -சபாநாயகர் அப்பாவு பேட்டி
x

கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

சென்னை ,

'நாயகன்' படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் 'தக்லைப்' படம் உருவாகி இருக்கிறது. வருகிற ஜூன் 5-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.இதன் பட விழாவில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார். அப்போது கமல்ஹாசன் பேசும்போது, ''ராஜ்குமாருடைய குடும்பம் கன்னடத்தில் இருக்கும் எனது குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது கன்னடம். அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார்'', என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு, கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம் தெரிவித்து, 'கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை' என்று கூறியுள்ளார். அதேபோல் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜனதா தலைவர் விஜயேந்திராவும் கண்டனம் தெரிவித்து, 'கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில் கமல்ஹாசன் கருத்து சரியானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

திராவிட குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனவும், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்துதான் பிறந்துள்ளதாகவும் ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து கூறியுள்ளார். கமல்ஹாசன் கருத்துக்கு ஆதாரங்கள் உள்ளன.அவரின் கருத்து சரியானது. என தெரிவித்தார்.

1 More update

Next Story