காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க கோரிக்கை

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க கோரிக்கை
Published on

நாலாட்டின்புத்தூர்:

கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதாஜீவனிடம் காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய பங்குதந்தை அந்தோணி குரூஸ் கொடுத்துள்ள மனுவில், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் திருவிழா ஆண்டுதோறும் ஆக. 6-ந்தேதி தொடங்கி ஆக. 15-ந்தேதி வரை 10 நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தல விழாவில் கடைசி மூன்று நாட்களான ஆக.13,14,15 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலும் இருந்து அன்னையை தரிசிக்க வருகை தருவர். சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆக. 14-ந்தேதி இரவு சப்பரபவனி மற்றும் தேர்பவனி நடைபெறுகின்ற காரணத்தால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், ஆண்டுதோறும் ஆக. 14-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விடுமுறை அளிக்க தாங்கள் ஆவண செய்யவேண்டும், என கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com