சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா

சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா
Published on

சிதம்பரம்

மேற்கு மாவட்ட பா.ஜ.க.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி சிதம்பரம் கீழ ரத வீதியில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மாமல்லன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிதம்பரம் நகர தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொது செயலாளர் கோபிநாத் கணேசன், அலுவலக செயலாளர் அரவிந்தன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் ஆளவந்தார், மண்டல தலைவர்கள் பரத், பகிரதன், சிதம்பரம் நகர பொது செயலாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது சிதம்பரம் நகர தலைவர் முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் 10 பேர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் பள்ளி

சிதம்பரம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காமராஜரை பற்றி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. இதில் சிதம்பரம் நகராட்சி கவுன்சிலர் இந்துமதி அருள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேச்சு மற்றும் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு தருமை ஆதினத்தின் பொது மேலாளர் கோதண்டராமன் பரிசு வழங்கினார்.

பள்ளியின் செயலாளர் சபாநாயகம், முதல்வர் ஆறுமுகம், துணை முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் பிரிதிவிராஜன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீமுஷ்ணம் லயன்ஸ் சங்கம்

ஸ்ரீமுஷ்ணம் லயன்ஸ் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.செங்கோல், பூவராகமூர்த்தி, ஆசிரியர்கள் வேல்முருகன், ரவிசுந்தர், வர்த்தக சங்க தலைவர் சோக்கு.சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு லயன்ஸ் சங்க தலைவர் துரை.சோலையப்பன் தலைமை தாங்கி, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாளா லயன்ஸ் தலைவர் எஸ்.சாலை கனகதாரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, அதற்கான பணியை தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து அரசு ஆரம்பப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஆயிரக்கணக்கான நோட்டுப் புத்தகங்கள், பேனா போன்றவற்றை செயலாளர் டாக்டர் நிஷாந்த், இணைச்செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளரும், என்ஜினீயருமான செந்தில், இணைப்பொருளாளர் ஆர்.பி.ரவிச்சந்திரன் மற்றும் அரிமா சங்கத்தினர் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com