முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் - ஒ. பன்னீர் செல்வம் மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஒ. பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Image Courtesy : twitter@OfficeOfOPS
Image Courtesy : twitter@OfficeOfOPS
Published on

தேனி:

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் இன்று காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஒ. பன்னீர் செல்வம் தேனி நாடாளுமன்ற அலுவலகம் முன்பாக வைக்கப்பட்ட காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவரும், தொழில் வளர்ச்சியை உருவாக்கியவருமான கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டுச் சேவைக்கெனத் தம்மை அர்பபணித்துக் கொண்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள் எந்நாளும் இந்திய மக்களின் இதயங்களில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார். அவரின் தியாகத்தையும்,

சேவையையும் போற்றுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com