காமராஜர் அரசு கலைக்கல்லூரி- கிரிக்கெட் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியும், மாவட்ட கிரிக்கெட் சங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
காமராஜர் அரசு கலைக்கல்லூரி- கிரிக்கெட் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மற்றும் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனுமான டாக்டர். பொ.அசோக்சிகாமணி வழிகாட்டுதலின்படி தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்ரீநாத், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் அ. பீர்க்கான் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு மோகன கண்ணன் ஆகியோரிடம் வழங்கினார்.

இதன் மூலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் கல்லூரி மாணவர்களுக்கு கிரிக்கெட் வலை பயிற்சி, அளிக்கப்பட்டு கல்லூரியின் கிரிக்கெட் அணியை திறம்பட செயல்பட உறுதுணையாக இருக்கும். மேலும் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள், மாவட்டங்களுக்கிடையான கிரிக்கெட் போட்டிகள், கோடைகால கிரிக்கெட் பயிற்சி ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் பெற முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com