காமராஜர் பிறந்த நாள் விழா

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்த நாள் விழா
Published on

பொறையாறில் காமராஜர் பிறந்த நாள் விழா நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். செயலாளர் சாமுண்டீஸ்வரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நெப்போலியன் வரவேற்று பேசினார். தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், பொறையாறு நாடார் எஸ்டேட்டை சேர்ந்த விஜயாலயன் ஜெயக்குமார் ஆகியோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து விஜயாலயன் ஜெயக்குமார் பொறையாறில் உள்ள டி.கே.என். அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சந்திரபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பரிசு பொருட்களை வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவமனோகரி, சரவணன், உதவி தலைமை ஆசிரியர் ஜீவிதா, குத்தாலம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சிவகுமார், முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி மற்றும் சங்க நிர்வாகிகள், இளைஞரணியினர் கலந்துகொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com