

ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள காமராஜர் வெண்கல சிலைக்கு செருப்புமாலை அணிவித்து மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.
இந்த செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலையை அவமரியாதை செய்தவர்களைக் கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி சிலையை அவமரியாதை செய்த மர்ம நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கோமிராக்களை ஆராய்ந்து குற்ற செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் ஜெயராம் என்பவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.