

சென்னை,
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், வெள்ளக்கோயில் சுவாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.