

சென்னை,
பெருந்தலைவரின் காமாராஜரின் நினைவு நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எளிமை, நேர்மை, தன்னலமற்ற மக்கள் சேவை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த கல்விக்கண்திறந்த கர்மவீரர் திரு. காமராஜர் அவர்களின் நினைவு நாள் இன்று! கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஏழை எளிய மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அணைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் தமிழகத்தின் அடித்தள வளர்ச்சிக்கும் அவர் முக்கிய பங்காற்றினார்.
பதவியை அதிகாரத்திற்கான கருவியாக அல்லாமல், மக்கள் நலனுக்கான பொறுப்பாகக் கருதிய கர்மவீரர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்கும் என்றும் வழிகாட்டும் முன்னுதாரணமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த பெருந்தலைவரும், அரசியல் அதிகாரத்தைத் தனக்காகப் பயன்படுத்தாமல், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எதிர்காலத் தலைமுறைகளுக்காகவும் அர்ப்பணித்தவருமான கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று.
எளிய குடும்பத்தில் பிறந்து, விடுதலைப் போராட்ட வீரராக வாழ்க்கையைத் தொடங்கி, தன்னலமற்ற உழைப்பாலும், தியாகத்தாலும் இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய உன்னதத் தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகள் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார்.
எளிமை, நேர்மை, தூய்மை மற்றும் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கையின் மூலம், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று. மக்கள் சேவையை தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர். அரசுப் பள்ளிகள், மதிய உணவுத் திட்டம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் வளர்ச்சி எனப் பல துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துச் செயலாற்றிய நவீன தமிழகத்தின் சிற்பி.
அவரது எளிமையும் நேர்மையும் பொதுவாழ்வில் அனைவருக்கும் என்றும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும். கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்.
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு 33,000 நீர்நிலைகளைச் சீரமைத்துவேளாண்மை செழிக்க வழி செய்த ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,சேலம் உருக்கு ஆலை,நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த 9 ஆண்டுகால ஆட்சியில், மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை. 6 முறை கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறைவாசம்,15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர் 8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர், 2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைப் பெருந்தலைவர்!பதவிகள் பல வகித்த போதும் ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..! கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை..! குடும்பத்து வாரிசுகளுக்குப் பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தன்னிகரில்லாத் தலைவர்! நாட்டின் விடுதலைக்காகப் போராடி 3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்! நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! என்று தெரிவித்தார்.
ஏழை, எளிய மக்களின் பசிப்போக்கி, பள்ளிக்கூடம் தந்து, கல்வி விளக்கேற்றிய கல்வி வள்ளல்!
நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அணைகள் பல கட்டி விவசாயம் காத்தவர்!
மாநில வளர்ச்சிக்காக தொழிற்சாலைகள் பல கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர்!
பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கொண்டு, எளிமையின் இலக்கணமாய்த் திகழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுதினத்தில் அவரின் தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன் என்று தெரிவித்தார்.