காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ராசலாம்பட்டியில் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே ராசலாம்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி கொடியேற்றம், கணபதி பூஜை, காப்பு கட்டுதல், முளைப்பாளிகை ஊர்வலம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் 2-ம் கால யாகசாலை பூஜை, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், காமாட்சி அம்மன், முருகன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com