

கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் தமோதரதாஸ் பங்கஜ் மோடி நேற்று சென்றார். தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். நினைவாலயம் முழுவதையும் சுற்றி பார்த்து, தேவர் வாழ்ந்த வீட்டையும் பார்வையிட்டு, தேவரின் பூஜை அறையில் வணங்கினார். அப்போது, பா.ஜனதா மாவட்ட தலைவர் கதிரவன், தேசிய செயற்குழு உறுப்பினர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் கணபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் பொன் ஆறுமுகம் உள்பட பலரும் சென்றிருந்தனர்.