காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு

ஆதனூர், கரசங்கால் ஊராட்சிகளில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு
Published on

ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பண்ணையில் உள்ள பூவரசு, முருங்கை, பப்பாளி, மயில் கொன்றை, கொய்யா, தூங்கு மூஞ்சி உள்ளிட்ட நாற்றங்கால் செடிகளை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் நாற்றங்கால் முறைகளை பற்றி அங்கு இருந்த பணியாளர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கரசங்கால்

கரசங்கால் ஊராட்சியில் சமத்தவபுரம் குடியிருப்பு பகுதிக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் சென்று குடியிருப்பு வீடுகளில் நடைபெற்றுள்ள பராமரிப்பு பணிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதுப்பித்தல், குடியிருப்பு பகுதியில் சிமெண்டு கான்கிரீட் நடைபாதை அமைத்தல், பள்ளி கட்டிடம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செரப்பணஞ்சேரி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆரம்பாக்கம் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பொதுமக்களிடம் குடிநீரின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

ஏரி தூர்வாரும் பணி

இதனைத் தொடர்ந்து வைப்பூர் ஊராட்சியில் தனியார் பங்களிப்புடன் நடைபெற்றுவரும் சிறு பாசன ஏரி தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com