காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.14½ லட்சம்

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ரூ.14½ லட்சத்தை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.14½ லட்சம்
Published on

காஞ்சீபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள உண்டியல்கள் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று திறந்து எண்ணப்பட்டது. காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை வழக்கு ஆய்வாளர் பூங்கொடி, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வஜ்ரவேலு, கோவிந்தவாடி அகரம் கைலாசநாதர் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் 6 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

கோவில் பணியாளர்கள், சென்னை தொண்டு நிறுவன பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.14 லட்சத்து 55 ஆயிரத்து 585 ரொக்கமும், 37.200 கிராம் தங்கம், 430.600 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com