

சென்னை,
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் இன்று காலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கேபி முனுசாமி ஆகியோர் ஜெயேந்திரர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.