காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல்
Published on

சென்னை

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வாலாஜாபாத், செய்யூர் பகுதிகளில் மெரோ ஆக்ரோ பாம்ஸ் மற்றும் சிக்னோரா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயர்களில் உள்ள சொத்துக்களை, சுப்ரீம் கோர்ட் மேல்முறையீட்டு வழக்கில் 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி பறிமுதல் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஞாயிறன்று 6 இடங்களில் உள்ள சுதாகரன், இளவரசியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com