காஞ்சிபுரம்: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 35 பேர் தப்பியோட்டம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தனியார் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மறுவாழ்வு மையத்தில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் இன்று அதிகாலை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்றனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சிகிச்சை என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையத்தில் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெற்றதா? வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






