

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் தாலுகா ஊவேரி சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி கிராமம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகன் விஸ்வநாதன் (18 வயது). காஞ்சிபுரம் ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் படித்து 12-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்த நிலையில் விஸ்வநாதன் தங்கள் வயல்வெளியில் நெல் அறுவடை செய்த வைக்கோலை சேர்த்து வைப்பதற்காக சென்றார். அப்போது விஸ்வநாதன் மீது திடீரென மின்னல் தாக்கியது.
இதில் காயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக பொன்னேரி கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மின்னல் தாக்கி உயிரிழந்த விஸ்வநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்னல் தாக்கி 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.