காஞ்சிபுரம்: ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி...!

ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம்: ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி...!
Published on

காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று பீமன் - துரியோதனன் படுகள உற்சவம் நடைபெற்றது.

உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

பீமன் - துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், ஓரிக்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து, திரொளபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com