காஞ்சிபுரம்: ஆதாய கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


காஞ்சிபுரம்: ஆதாய கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
x

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒரு பெண்ணை ஆதாய கொலை செய்த திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், செங்காடு கிராமத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஈகாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி ராஜம் (வயது 69) என்பவரை, திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தில் வசிக்கும் பாஸ்கர்(43) மற்றும் அவரது மனைவி சரிதா(40) ஆகியோர் சேர்ந்து 11.6.2012 அன்று ஆதாய கொலை செய்ததாககவும், இதுசம்மந்தமாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் நீதிமன்ற விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சண்முகம் உத்தரவின்பேரில், தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், நீதிமன்ற ஏட்டு பாஸ்கரன் மற்றும் காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி, நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சசிரேகா ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று (31.7.2025) மேற்சொன்ன வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல், சரிதா மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் குற்றவாளி என உறுதிசெய்து, சரிதாவிற்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.3,000 அபராதம் மற்றும் பாஸ்கருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத்தர சிறப்பாக புலன் விசராரணை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

1 More update

Next Story