

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பி.பி.சி.யின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை இளைஞர் காங்கிரசார் பொதுவெளியில் திரையிட்டனர். இந்நிகழ்வை காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பா.ஜ.க. அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என குற்றம் சாட்டினார். மேலும் இந்த ஆவணப்படத்தை பட்டித்தொட்டியெங்கும் திரையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.