கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ் - சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு!

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர், திருநெல்வேலி - தாம்பரம் இடையே இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ் - சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு!
Published on: 

சென்னை,

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவையொட்டி, பக்தர்கள் மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - திருச்செந்தூர், திருநெல்வேலி - தாம்பரம் இடையே இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை - திருச்செந்தூர் சிறப்பு ரெயில்

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06007) , நவம்பர் 14-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

இந்த ரெயிலில் 8 ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகள், 7 ஏ.சி. 3 அடுக்கு எகானமி பெட்டிகள், 3 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (நவம்பர் 13) மாலை 6 மணிக்கு தொடங்கியது.

திருச்செந்தூர் - சென்னை சிறப்பு ரெயில்

திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ஒருவழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06008), நவம்பர் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த ரெயிலிலும் 8 ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகள், 7 ஏ.சி. 3 அடுக்கு எகானமி பெட்டிகள், 3 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள்

திருநெல்வேலி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06010), நவம்பர் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06009), நவம்பர் 16-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.40 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்த ரெயில்களில் 2 ஏ.சி. 2 அடுக்கு பெட்டிகள், 6 ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகள், ஒரு ஏ.சி. 3 அடுக்கு எகானமி பெட்டி, 7 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி இணைக்கப்படும்.

இந்த இரண்டு சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

கந்த சஷ்டி விழாவையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு ரெயில்களை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

X