

சென்னை,
தவெக அரசால் குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை. சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 17 கைதிகள் சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். அவ்வாறு தப்பி ஓடியவர்களில் 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன. இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை! இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.